• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் முன்னிலை: தவெக தலைவர்கள் போட்டியிடும் 11 தொகுதிகளின் நிலவரம் – நேரலை

Byadmin

May 4, 2026


தவெக நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்

பட மூலாதாரம், TVK

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 104 தொகுதிகளில் தற்போது (01:00 நிலவரப்படி) முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் என்ன நிலவரம்?

திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 16,579 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 6,499 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.

பெரம்பூர்

பெரம்பூர் தொகுதியில் ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 29,043 வாக்குகள் பெற்று விஜய் முன்னிலை வகிக்கிறார்.



By admin