அக்னிமித்ரா பால் சர்ச்சை
கடந்த வாரம், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபாதையில் தனது குழந்தைக்குப் பால் சூடாக்கிக் கொண்டிருந்த ஒரு வீடற்ற பெண்ணை அக்னிமித்ரா பால் திட்டும் காணொளி ஒன்று வெளியானது.
“நடைபாதையில் குழந்தைக்குப் பால் சூடாக்குகிறாயா? பார்க் ஸ்ட்ரீட்டிலா? இங்கே குடும்பம் நடத்த உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று பால் கேட்பது அந்தக் காணொளியில் இடம்பெற்றிந்தது. பின்னர் கொல்கத்தா காவல்த்துறையினர் அந்த குடும்பத்தினரை அங்கிருந்து விரட்டியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று அந்தப் பெண்ணை சந்தித்து இருப்பிடம் வழங்குவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.