• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

ஆப்பிரிக்க நாடுகளில் ஆணுறுப்புகள் திருட்டா? வதந்திகளால் பெருகிய வன்முறை – என்ன நிலவரம்?

Byadmin

Sep 6, 2026


போனிஃபேஸ் எம்காலா

பட மூலாதாரம், Alfred Lasteck / BBC

படக்குறிப்பு, போனிஃபேஸ் எம்காலா மற்றும் அவரது நண்பர், ஆண் ஒருவரின் பிறப்புறுப்பைத் திருடியதாகக் குற்றம் சாட்டிய கும்பலால் உணவகத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, “பிறப்புறுப்புத் திருட்டு” என்றழைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான தவறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக, 6 ஆப்பிரிக்க நாடுகளின் காவல்துறையிடம் இருந்து தரவுகளைச் சேகரித்த பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட் கண்டறிந்துள்ளது.

ஒருவரின் தோளில் சாதாரணமாகத் தட்டினாலே ஆண்களின் பிறப்புறுப்புகள் சுருங்கிவிடும் அல்லது காணாமல் போய்விடும் என்ற வதந்திகளுடன் இந்தக் கொலைகள் தொடர்புடையவை. சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் இந்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்து வருகின்றன.

“யாரோ ஒருவரின் பிறப்புறுப்பை நாங்கள் திருடிவிட்டதாக அவர்கள் கூச்சலிட்டனர். மிகப்பெரிய கூட்டம் இருந்ததால் எங்களுக்குத் தப்பிக்க எந்த வழியும் இல்லை,” என்று ஏப்ரல் மாதத்தில் தான் சந்தித்த துயரமான அனுபவம் குறித்து தான்சானியாவைச் சேர்ந்த மெக்கானிக் போனிஃபேஸ் எம்காலா பிபிசியிடம் தெரிவித்தார்.

பிறப்புறுப்பைத் திருடியதாக நம்பப்பட்டதால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். பிபிசி பார்த்த காணொளிகளில் இடம்பெற்ற சம்பவங்களும் அவரது அனுபவத்தைப் போலவே இருந்தன. அந்நியர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு தங்களது பிறப்புறுப்பு உறுப்புகளான ஆண்குறி மற்றும் விதைப்பைகள் காணாமல் போய்விட்டதாகவோ அல்லது சுருங்கிவிட்டதாகவோ ஆண்கள் கூறுகின்றனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் அந்த உறுப்புகளை மீண்டும் கொடுக்குமாறு ஒரு கும்பல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கோருகிறது. இத்தகைய கூற்றுகள் நீண்ட காலமாக நிலவி வரும் அச்சங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளில் வேரூன்றியவை.

By admin