• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

FQL, VG செயலி மோசடி: இரட்டிப்பு லாபம் என நம்பி பணத்தை இழந்த ஆயிரக்கணக்கானோர் – பிபிசி கள ஆய்வு

Byadmin

Sep 5, 2026


பண மோசடி செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பண மோசடி செய்தவர்களைக் கைது செய்ய வேண்டுமென கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் FQL, VG என்ற செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

FQL Investment Trading, FQL Exchange App, VG Investment Group Syndicate ஆகிய பெயர்களில் பல அடுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் கிரிப்டோ வர்த்தகத்தின் பெயரில் இந்தத் திட்டம் செயல்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை கூறுகிறது. ஆனால் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த தொகையை காவல்துறை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இந்தத் திட்டத்தால் காசம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக அறிந்த பிபிசி தமிழ், அவர்கள் எவ்வாறு இதில் இணைந்தனர் என்பதை அறிய அங்கு சென்றது.

நத்தம் நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 13 கி.மீ. தொலைவில் காசம்பட்டி அமைந்துள்ளது.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை முதலீடு

கிராம மக்கள் சிலருடன் பிபிசி தமிழ் பேச முயன்றபோது, பணத்தை இழந்ததை எண்ணி உணவுகூட உட்கொள்ள முடியாத அளவுக்குச் சோகத்தில் இருப்பதாகவும், பேசுவதற்குத் தெம்பு இல்லை என்றும் சிலர் கூறினர்.

By admin