• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்? சமாளிப்பது எப்படி?

Byadmin

Sep 5, 2026


அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படும். உடல் பருமன் பல நோய்களுக்கு அடிப்படையாக அமையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகில் பத்தில் ஒரு குழந்தை உடல் பருமனாக இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் 2025ஆம் ஆண்டு குழந்தை ஊட்டச்சத்து உலக அறிக்கை ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது உலகில் பள்ளி செல்லும் வயதில் உள்ள 188 மில்லியன் குழந்தைகள் பருமனாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதனால் அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், 190 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகில் முதல் முறையாக குழந்தைகளிடம் எடை குறைவு காணப்படுவதைவிட உடல் பருமன் அதிகமாகக் காணப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. 2000ஆம் ஆண்டு முதலான தரவுகளைப் பார்க்கும்போது, 5 -19 வயதிலான குழந்தைகளிடம் எடை குறைவு 13% முதல் 9.2% ஆகக் குறைந்துள்ளது. அதேநேரம், உடல் பருமன் 3% முதல் 9.4% ஆக அதிகரித்துள்ளது. இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒரு வகையாகவே பார்க்கப்படுகிறது.

“ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறும்போது, எடை குறைவைப் பற்றி மட்டுமே நாம் பேசவில்லை. உடல் பருமன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என்ற கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பழங்கள், காய்கறிகள், புரதம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன” என்று யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநர் காத்தரின் ரஸல் கூறுகிறார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் தெற்கு ஆசிய நாடுகளில்தான் ‘கூடுதல் எடை’ கொண்டவர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் 2022ஆம் ஆண்டில் 5-19 வயதிலான குழந்தைகளில் இது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. உடல் பருமன், ஒரு காலத்தில் வளமான நாடுகளின் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

By admin