• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

நாமலின் கைது புதிய விடயமல்ல | நாமலைச் சந்தித்த பின் மஹிந்த கருத்து!

Byadmin

Sep 5, 2026


சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் எனத் தெரிவித்த அவர், இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளதாகவும், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எனக் கூறிய அவர், இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

By admin