• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?

Byadmin

May 31, 2026


 ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?

பட மூலாதாரம், MStudioImages/Getty Images

    • எழுதியவர், எல்லன் சாங்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் ஆண் சகோதரர்களையோ அல்லது நண்பர்களையோ விட நீங்கள் நீண்ட காலம் உயிர்வாழவே அதிக வாய்ப்புள்ளது, உலகளாவிய சராசரியை எடுத்துக்கொண்டால், சுமார் 5 ஆண்டுகள் கூடுதலாக வாழக் கூடும்.

பெண்களின் இந்த நீண்ட ஆயுளுக்குரிய துல்லியமான காரணங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அறிவியலாளர்களிடம் இது குறித்துச் சில கோட்பாடுகள் உள்ளன.

மேலும், சில பறவை இனங்களைப் போன்ற உயிரினங்களில், ஆண் உயிரினங்களே நீண்ட ஆயுள் கொண்டவையாக இருப்பது ஏன் என்பதை விளக்கிக்கூறவும் இந்தக் கோட்பாடுகள் உதவக்கூடும்.

இளவயது மரணம்

“கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும், ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்,” என்கிறார் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு மக்கள்தொகை முதுமை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் சாரா ஹார்ப்பர்.

ஆனால், “இது நாட்டிற்கு நாடு பெருமளவில் மாறுபடுகிறது,” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

By admin