• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திராவில் காரால் 3 முறை மோதப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழப்பு – என்ன நடந்தது?

Byadmin

Aug 10, 2026


ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி  இளைஞர்களால் காரால் மோதப்பட்டதில் காயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்தர்.  பிரியங்காவின் ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது.

பட மூலாதாரம், UGC

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இளைஞர்கள் ஓட்டிய கார் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்தார்.

ஹைதராபாத்தில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், அவரது உடல், குடும்பத்தினரால் தெலங்கானாவில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

“பிரியங்கா ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் 3.32 மணிக்கு உயிரிழந்தார்,” என்று அவருக்கு சிகிச்சை அளித்த கிம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிற்பகல் 2.12 மணிக்கு பிரியங்கா கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் 3.32 மணிக்கு அவர் உயிரிழந்தார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக உருவாகக்கூடிய ஒரு மருத்துவ மாணவியை இழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது,” என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பிரியங்காவின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

By admin