• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய அணியில் மீண்டும் சர்ஃபராஸ் கான்: ஆடும் லெவனில் இடம் பெற சவாலாக இருப்பது யார்?

Byadmin

Aug 10, 2026


அக்டோபர் 9, 2024 அன்று பெங்களூருவில் நியூசிலாந்திற்கு எதிராக சர்ஃபராஸ் கான் சதம் அடித்தார்.

பட மூலாதாரம், Abhishek Chinnappa/Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“நான் இதில் முழுமையாகப் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் இருப்பதையெல்லாம் வைத்து முழு வலிமையுடன் போராடுவேன்.”

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் சேர்க்கப்படாத போது சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த பதிவைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்தது.

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

வலது காலின் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாய் சுதர்சன் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்சலன்ஸில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிசிசிஐயின் தகவலின்படி, அவரது குணமடையும் நிலை திருப்திகரமாக உள்ளது.

By admin