ஹோம்வியூ சிறப்பு அம்சங்கள்:
ஆப்பிள் ஹோம்வியூ சாதனத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று சிரி ஏஐ ஆகும். இது ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டண்ட்-இன் மறுவடிவமைக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். இது மிகவும் இயல்பான உரையாடல்களையும், கோரிக்கைகளை சிறப்பாக புரிந்துகொள்ளும் திறனையும் வழங்கும். பயனர்கள் தங்கள் ஐபோன்களை எடுக்காமலேயே கேள்விகளை கேட்கலாம், இசையை கண்டறியலாம் மற்றும் தகவல்களை பெறலாம்.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் ஐபோன் அல்லது ஐபேட் மாடலுடன் இணைக்கப்படும்போது, சிரி ஏஐ மெசேஜஸ் மற்றும் காலண்டர் போன்ற செயலிகளில் இருந்து தனிப்பட்ட சூழலை பயன்படுத்தி, மிகவும் பொருத்தமான பதில்களை வழங்கவும், பயனர்கள் பணிகளை முடிக்க உதவ முடியும்.
ஹோம்வியூ, facial recognition மூலம் ஆறு பேர் வரை அடையாளம் கண்டு, தனிப்பட்ட செயலிகள் மற்றும் விட்ஜெட்களுடன் ஒரு பிரத்யேக ஹோம் ஸ்கிரீனை காண்பிக்கிறது. இருப்பினும், அடையாளம் காணப்பட்ட பயனர், தங்களுடைய இணைக்கப்பட்ட ஐபோன் அல்லது ஐபேட் அருகில் இருந்து, அது சமீபத்தில் திறக்கப்பட்டிருந்தால் மட்டுமே தனிப்பட்ட தகவல்கள் காட்டப்படும்.
இதை கொண்டு பயனர்கள் ஃபேஸ்டைம் அழைப்புகளை மேற்கொள்ளலாம், செய்திகளை அனுப்பலாம் மற்றும் பதில் அளிக்கலாம், ஆப்பிள் மியூசிக் மற்றும் பாட்காஸ்ட்களைக் கேட்கலாம். இவைதவிர ஆதரிக்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோ செயலிகளை பயன்படுத்தலாம்.