• Thu. May 7th, 2026

24×7 Live News

Apdin News

ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அதிமுக, விசிக, இந்திய கம்யூ. கூறியது என்ன?

Byadmin

May 7, 2026


தவெக, விஜய், தமிழ்நாடு, ஆளுநர் மாளிகை

பட மூலாதாரம், Riya Mariyam R/NurPhoto via Getty Images

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?

அருண்ராஜ்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவை கோரிய தவெகவின் அருண்ராஜ்

புதுச்சேரி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் வென்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு அனுப்பட்டனர்.

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்திருந்தார்.

By admin