தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரண் நடித்த பெத்தி படத்தின் எடிட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ‘பெத்தி’ படம் பலமுறை வெளியிட மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைத்து தயாரிக்கும் ‘பெத்தி’ என்னும் பான் இந்தியா படத்தில் ராம் சரண் வேறொரு தோற்றத்தில் நடித்துள்ளார்.
உள்ளூர் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக தன் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்யும் அவரது புகைப்படத்தை வெளியிட்டபோது “இந்தியாவின் ஹல்க்” என்று அவரது ரசிகர்கள் அவருக்கு பெயர் சூட்டி கொண்டாடினர்.
இந்த வெற்றி படத்திற்காக ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து சிக்கிரி எனும் பாடல் பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் எடிட்டிங் நிறைவடைந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி அனைவரும் திரையில் வந்து பார்க்க வேண்டுமென அப்படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.