• Thu. May 7th, 2026

24×7 Live News

Apdin News

திமுக – அதிமுக கூட்டணி ஆட்சியா? திடீரென தகவல் பரவியதன் பின்னணியும் உண்மையும்

Byadmin

May 7, 2026


எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. இந்தத் தகவலை திமுக தரப்பு உடனடியாக மறுத்துவிட்டது.

அதேசமயம், செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, “எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை, தீர்க்கமான முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிசாமி ‘கிங் மேக்கர்’ அல்ல, அவரே ‘கிங்'” என கூறியிருந்தார்.

அரசியலில் இரு துருவங்களாக உள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவிய தகவல், உண்மையான முயற்சிகளை அறிந்து வெளியானதா அல்லது யூகங்களாக பரவியதா, வதந்தியாக பரப்பப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இப்படியொரு முயற்சி நடந்தது உண்மை என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

திமுக, அதிமுக இரு கட்சியினரும் அதை திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

By admin