11
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர், ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் நான்காவது நாளில் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்குச் சென்று (Bondi Beach), அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவசர கால மீட்புப் பணியாளர்களைச் சந்தித்தனர்.
கடந்தாண்டு டிசெம்பர் மாதம் ஹனுக்கா (Hannukah) கொண்டாட்டத்தின் போது நடந்த அந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிர்பிழைத்த ஜெசிகா சாப்னிக் கான் மற்றும் எலோன் ஜிசர் ஆகியோரை இளவரசர் ஹாரியும் மேகனும் நேரில் சந்தித்துப் பேசினர்.
மேலும், தாக்குதலின் போது பொதுமக்களைப் பாதுகாத்த ஹீரோக்களாகப் போற்றப்படும் போண்டி கடற்கரை உயிர் காக்கும் வீரர்களையும் அவர்கள் சந்தித்தனர்.
சிட்னி யூத அருங்காட்சியகத்தின் பிரதிநிதிகள் இந்த வருகையை “மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று விவரித்தனர்.
ஹாரி, மேகன் தம்பதி தற்போது அரச குடும்பத்தின் பணிபுரியும் உறுப்பினர்களாக இல்லாததால், இந்தப் பயணம் ஒரு தனிப்பட்ட பயணமாகவே கருதப்படுகிறது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, சிட்னியில் நடைபெறும் ஒரு மகளிர் கருத்தரங்கில் மேகன் கலந்துகொள்ள உள்ளார்; இதற்கான விஐபி டிக்கெட் விலை சுமார் 3,199 ஆஸ்திரேலிய டாலர்கள் (£1,696) ஆகும். மேலும், அவர் ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’ (MasterChef Australia) நிகழ்ச்சியில் விருந்தினர் நடுவராகவும் பங்கேற்க உள்ளார்.
