• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26 சதவீதத்தால் அதிகரிக்கின்றன!

Byadmin

Nov 26, 2026


ஈரான் போர் தாக்கத்தால் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் முதல் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கான எரிசக்தி கட்டணங்கள் 26 சதவீதம் வரை அதிகரிக்கவுள்ளன.

எதிர்வரும் புத்தாண்டின் முதல் மூன்று மாதங்களில், ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்த எரிசக்தி கட்டணம் சுமார் £37 வரை உயரும். இருப்பினும், இது அந்தந்த குடும்பத்தின் எரிசக்தி பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும் என்பதால், குளிர்காலத்தில் இந்தக் கூடுதல் கட்டணம் மாதம் £60 வரை கூட அதிகரிக்கக்கூடும்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் சராசரி அளவில் எரிசக்தியைப் பயன்படுத்தும் மற்றும் ‘டைரக்ட் டெபிட்’ முறையில் கட்டணம் செலுத்தும் ஒரு குடும்பத்திற்கு, இந்த விலை உயர்வு ஓராண்டு காலம் நீடித்தால், அவர்களின் ஆண்டு கட்டணம் £1,723 இருந்து £2,166 ஆக உயரும் என்று எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான ‘ஒப்கெம்’ (Ofgem) தெரிவித்துள்ளது.

குளிர்காலச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், ஜனவரி 4 முதல் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அரசு தலா £100 வழங்கவுள்ளது. ஏற்கெனவே மின்சாரத்தின் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கூடுதல் உதவியும் வழங்கப்படவுள்ளது.

இருப்பினும், இந்த உதவித்தொகை பற்றாக்குறையாக உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மத்தியில் கடன் சுமை அதிகரித்து அவசர உதவிகள் தேவைப்படும் நிலை உருவாகும் என தொண்டு நிறுவனங்களும் எரிசக்தி விநியோகஸ்தர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் மொத்த விற்பனைச் செலவுகள் அதிகரித்தமையே இந்த விலை உயர்வுக்கு முழுமையான காரணம் என்று ஒப்கெம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் - ஈரான்

The post இங்கிலாந்தில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26 சதவீதத்தால் அதிகரிக்கின்றன! appeared first on Vanakkam London.

By admin