• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண கோல காணொளி

Byadmin

Nov 11, 2026


நடிகை பிரியா பவானி சங்கரும், அவருடைய நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜூவும் திருமண கோலத்தில் உலாவரும் காணொளியை நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருக்கிறார். பிரியா பவானி சங்கர்- ராஜ்வேல் ராஜு திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் அவர்கள் இடம்பெறும் இந்த காணொளி இவர்களின் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தன் கலை பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் – கல்லூரியில் உயர்கல்வி கற்கும் காலத்திலேயே அவருடைய ஆண் நண்பரான ராஜவேல் ராஜுவை காதலித்து வந்தார். இருவரும் தங்களது காதலை பொது வெளியில் பலமுறை உறுதிப்படுத்தினர். திரை துறையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பரபரப்பாக நடிகை பிரியா பவானி சங்கர் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கும் ராஜவேல் ராஜுவிற்கும் இடையேயான இந்த திருமணம் சார்ந்த காணொளி வருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

இதனிடையே நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘டிமான்டி காலனி 3’,  ‘மரகத நாணயம் 2 ‘, ‘இந்தியன் 3’  ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இந்த காணொளி தொடர்பாக அவருடைய ரசிகர்கள் திருமணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் இந்த காணொளி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நுழைவு சீட்டுகள் விற்பனை ஆரம்பம்

By admin