• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

இதயநோய்: ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் சிலருக்கு புதிதாக அடைப்பு வருவது ஏன்? 4 கேள்வி – பதில்கள்

Byadmin

Jul 24, 2026


இதய நோய்: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்த பிறகும்கூட மாரடைப்பு ஆபத்து நீடிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன.

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்திய பிறகு, இதய நோய் முழுதாகக் குணமாகிவிட்டதாக ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இதய நோயை உண்டாக்கும் செயல்முறையை ஸ்டென்ட் தடுப்பதில்லை, அது அடைபட்ட ரத்த நாளத்தை விரிவுபடுத்தி, ரத்த ஓட்டத்தை மட்டுமே சீராக்குகிறது.

எனவே, நோயாளிகளும் பொது மக்களும், ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகும், உடலின் பிற ரத்த நாளங்களில் கொழுப்பு மற்றும் பிற பொருட்கள் படிவது தொடரக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைப் பொருத்திவிட்டதாலேயே அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிட்டதாகவோ, ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு மீண்டும் திரும்பலாம் என்றோ அர்த்தமில்லை.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தைத் தொடர்ந்து கவனமாகப் பராமரிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

உண்மையில், இதய நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க, ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்கள் மேலதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

By admin