• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

அருணாச்சலம்: தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – காவல்துறை தாக்கியதாக குடும்பத்தினர் புகார்

Byadmin

Jul 24, 2026


அருணாச்சலம்

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற 24 வயது இளைஞர், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தனது மகனை காவல்துறையினர் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்களும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) அரசு மதுபானக் கடை பாரில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூலை 17-ஆம் தேதி, மதுபானக் கடை மூடிய பிறகு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அருணாச்சலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி ஜூலை 23ஆம் தேதி உயிரிழந்தார்.

By admin