• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்க நடவடிக்கை | அமைச்சர் சுனில் செனவி 

Byadmin

Jul 24, 2026


யாழ்ப்பாணம் மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்டேன். பழைய கச்சேரி கட்டடம் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய சொத்து. அதனை மிகவும் விரைவாகப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.

அதேபோன்று யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் என இவை அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

By admin