• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

‘நீட் தேர்வை எதிர்க்கும் தவெக அரசு இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஏன்?’

Byadmin

Jul 24, 2026


மாணவர் அமைப்பு

பட மூலாதாரம், Handout

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.

இந்த நடவடிக்கையில் ஏராளமான இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

காவல்துறையின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

டெல்லியில் மாணவர்கள் காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்கொண்டது போல, தமிழ்நாட்டிலும் மாணவர்கள் காவல்துறையின் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர்

By admin