• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

மத்திய அமைச்சர்களை சந்திக்கும் சிஜேபி குழு

Byadmin

Jul 24, 2026


கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சி.ஜே.பி.) பிரதிநிதிகள் குழு அரசு அமைச்சர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு நடைபெறும், ஆனால் அது நடைபெறும் இடம் வெளியிடப்படவில்லை.

பேச்சுவார்த்தை:

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர நடந்த தீவிர திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இது நடைபெறுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சி.ஜே.பி. இங்குள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து ‘நீட்’ விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

ராகுல் காந்தி போராட்டம்:

நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, “நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும் வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம். நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.

நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.

இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்,” என்றார்.

By admin