• Mon. Nov 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவின் ஜென்-ஸி போராட்டம் இப்போது நிச்சயமற்ற சூழலில் இருப்பது ஏன்?

Byadmin

Nov 16, 2026


கோடைக்காலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, நிச்சயமற்ற குளிர்காலத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் ஜென்-ஸீ தலைமுறைப் போராட்டக்காரர்கள்

    • எழுதியவர், அசாதே மோஷிரி
    • பதவி, தெற்காசியச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜூலை மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இளைஞர்களின் போராட்டம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாகச் செய்தி வெளியானதும் போராட்டக் களத்தில் உற்சாகக் குரல்கள் எழுந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மகிழ்ச்சியுடன் என்னிடம் திரும்பி, “இது இளைஞர்களின் வெற்றி” என்றார்.

மூன்று மாதங்களுக்கும் சற்றே அதிகமான காலத்துக்குப் பிறகு, தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. மாணவப் போராட்டக்காரர்களால் இப்போது ஒன்று கூடுவதற்குக்கூட சிரமமாக உள்ளது.

கடந்த மாதம், வாக்குரிமை தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கடந்த கோடைக்காலத்தில் புதியதொரு எதிர்ப்பலை உருவானது. இளைஞர்களிடையே நிலவிய ஆழமான அதிருப்தியும், இணையத்தில் பரவிய நையாண்டிகளும் இந்தப் போராட்டங்களுக்குத் தூண்டுதலாக அமைந்தன.

By admin