• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து ‘பருவமழை இடைவேளை’ வர எல்நினோ காரணமா?

Byadmin

Jul 14, 2026


இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து 'பருவமழை இடைவேளை' வர எல்நினோ காரணமா?

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நீண்ட பருவமழை இடைவேளை மழைக் குறைபாட்டை மேலும் கவலைக்குரியதாக மாற்றக்கூடும் (சித்தரிப்புப் படம்)

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது, ஆனால் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் ‘மான்சூன் பிரேக்’ (பருவமழை இடைவேளை) காரணமாக பல நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், குறிப்பாக, நாட்டில் பருவமழை ஏற்கனவே சராசரியை விட மிகவும் குறைவாக பெய்துள்ள நேரத்தில் நிகழ்ந்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த 6-7 நாட்களுக்குள் வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகள், மேற்கு-மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய தீபகற்பத்தில் பருவமழை பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையமும் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பருவமழை காலத்தில் ஏற்படும் இந்த வகையான மாற்றம் எவ்வளவு தீவிரமான நிகழ்வு மற்றும் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த செய்தியில் அறிய முயல்வோம்.

‘லைவ் வெதர் ஆஃப் இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர் நவ்தீப் தஹியா, “ஜூலை இரண்டாவது வாரத்தின் செயற்கைக்கோள் படங்கள் மிகவும் கவலைக்குரிய சூழலைக் காட்டுகின்றன” என்று எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

By admin