• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஹோர்மூஸில் நடப்பது என்ன?

Byadmin

Apr 19, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்மூஸ் நீரிணை

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையை இரான் ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள தொடங்கியிருப்பதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதப் படைகள் அப்பகுதியைக் கட்டுப்படுத்தும் வகையில் ஹோர்மூஸ் நீரிணை “அதன் முந்தைய நிலைக்கு” திரும்பும் என்று இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) வெளியிட்ட அறிக்கையை அதனுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை, இரானிய மாணவர் செய்தி முகமை மற்றும் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) ஆகியவை மேற்கோள் காட்டுகின்றன.

“முன்னதாக, சில கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்வதை நாம் கண்டோம். ஆனால், இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாக எவ்வளவு கப்பல்கள் கடந்து போயின என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று அவை தெரிவித்தன.

‘அமெரிக்காவின் முற்றுகை என்று சொல்லப்படுவது கடற் கொள்ளைக்குச் சமமானது’ என்று ஐஆர்ஜிசி அறிக்கை கூறுகிறது. அமெரிக்கா தனது துறைமுகங்களை முற்றுகையிடுவதைத் தொடர்ந்தால், நீரிணையை மூடிவிடுவோம் என்று இரான் முன்னதாகவே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

இரானிய துப்பாக்கிப் படகுகளால் (Gunboats) எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ஐக்கிய ராஜ்ஜியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவிக்கிறது

By admin