• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா அழைத்தும் வங்கதேசம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது ஏன்?

Byadmin

Sep 18, 2026


இந்தியா அழைப்பு விடுத்தும்கூட வங்கதேசம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? இழப்பு யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இரண்டு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த வாரம் இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர் கலந்துகொள்ள வேண்டாமென முடிவு செய்தார்.

தற்போது பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக இருக்கும் தாரிக் ரஹ்மானை பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா அழைத்து இருந்ததாகவும், ஆனால் இதை இருதரப்பு அழைப்பாகக் கருதக்கூடாது என்றும் வங்கதேச துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெளிவுபடுத்தியுள்ளார். வங்காள விரிகுடா பகுதியில் உள்ள ஏழு நாடுகளால் உருவாக்கப்பட்ட பிராந்திய அமைப்பே பிம்ஸ்டெக்.

செவ்வாய்க் கிழமையன்று ஹுமாயூன் கபீர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வங்கதேச பிரதமரை இரு தரப்பு பயணத்திற்காகவும் நாங்கள் அழைத்திருந்தோம். அதன் பின்னர், பிம்ஸ்டெக் தலைவராக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்தோம். அவருக்கு இரண்டு அழைப்புகள் கிடைத்துள்ளன. ஒன்று இரு தரப்பு பயணத்திற்கானது, மற்றொன்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கானது” என்று கூறினார்.

வங்கதேசத்திலும் இது தொடர்பாகப் பெரும் விவாதம் நடந்து வருகிறது. ‘தாங்கள் சேர விரும்பும் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் இருந்ததன் மூலம் வங்கதேசம் என்ன சாதித்துள்ளது? இந்த முடிவால் வங்கதேசத்திற்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?’ என்பது குறித்து அங்கு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஹுமாயுன் கபீர் கூறியது என்ன?

“பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதிதாக ஏதோவொன்று உருவாகியிருப்பது போலத் தெரிகிறது. இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒத்துழைப்பை அதிகரிக்க அவர்கள் முயன்று வருகின்றனர். அதேபோல, டிஜிட்டல் நாணய அளவில் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன,” என்று வங்கதேச ஆங்கில செய்தி இணையதளமான ‘தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்’டிடம் பேசிய அமெரிக்காவுக்கான முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர் கூறினார்.

By admin