• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

தங்க சங்கிலியை கொடுத்து படகில் இலங்கை சென்ற தமிழக சிறுவன் – ஈரோட்டில் இருந்து மன்னார் சென்றது எப்படி?

Byadmin

Sep 18, 2026


மீட்கப்பட்ட சிறுவன் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்

பட மூலாதாரம், SRI LANKA NAVY

இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பேஸ்புக் ஊடாக காதலித்ததாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான ஒரு சிறுவன் படகில் வந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து படகொன்றில் மன்னார் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டு ஒன்றை வந்தடைந்த அந்தச் சிறுவன் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வழக்கமான கடல்சார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளின்போது மீட்கப்பட்டார்.

அந்தச் சிறுவன், செப்டெம்பர் 11ஆம் தேதியன்று தலைமன்னாருக்கு அப்பாலுள்ள தொலைதூர மணல் திட்டு ஒன்றில் பாதுகாப்பற்ற நிலையில் அவதானிக்கப்பட்டு, அவசர மனிதாபிமான உதவி அடிப்படையில் மீட்கப்பட்டு, உடனடியாக அவருக்கு குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கி, மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக சிறுவன் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்தச் சிறுவன், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தலைமன்னார் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை

சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பேஸ்புக் ஊடாகக் காதலித்து வந்ததாகவும், அந்தச் சிறுமியை நேரில் சந்திக்கும் நோக்கில், ராமேஸ்வரத்தில் இருந்து படகொன்றின் மூலம் மன்னார் கடற்பரப்பை நோக்கி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதையடுத்து சமூக ஊடகங்களிலும் இந்தச் செய்தி பரவலாகப் பேசுபொருளானது.

By admin