• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா வந்து காதலரை மணந்த வங்கதேச பெண் ஒரு போன் காலால் சிக்கியது எப்படி?

Byadmin

Jun 30, 2026


இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், Tarun Patel

படக்குறிப்பு, தருண் படேல் மற்றும் காஜல் முகநூலில் சந்தித்தனர்

    • எழுதியவர், தேஜஸ் வைத்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காதலுக்கு எல்லைகள் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தின் லம்பவேல் பகுதியைச் சேர்ந்த தருண் படேலுக்கு இப்போது ‘எல்லை’ தான் மிகப்பெரிய எதிரியாக மாறியுள்ளது.

வங்கதேசப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய தருண், இன்று தனது குடும்பம் சிதறிவிடாமல் காப்பாற்றப் போராடி வருகிறார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுக்கு முன் நடந்த இந்த எல்லை கடந்த திருமணம், இப்போது குடும்பத்திற்கு ஒரு சட்டப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

வங்கதேசப் பெண் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்தது தங்களுக்குத் தெரியவந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக இப்போது அவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

குஜராத் காவல்துறையின் ‘ஆபரேஷன் டெல்டா ஹன்ட்’ நடவடிக்கைக்கு முன்பு வரை அனைத்தும் சாதாரணமாக இருந்தது, ஆனால் இந்த நடவடிக்கை திடீரென குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

By admin