• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் உணர்த்திய 4 விஷயங்கள் என்ன?

Byadmin

Oct 4, 2026


இந்தியா, மேற்கிந்திய தீவுகள்

படக்குறிப்பு, கடந்த சில தொடர்களாகவே, ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்களில் பும்ரா இல்லாமல் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு தடுமாறிக்கொண்டிருக்கிறது.

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் (வெஸ்ட் இண்டீஸ்) அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது மேற்கு இந்திய தீவுகள் அணி. இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என இந்திய அணி வென்றிருக்கிறது.

நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது. இந்தியா 4/2 என மூன்றாவது ஓவரிலேயே தடுமாற, ரோஹித் ஷர்மா – ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது.

ரோஹித் 92 ரன்களிலும், ருதுராஜ் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தத் தொடரில் முதல் முறையாகக் களமிறங்கிய கேஎல் ராகுல் தன் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன்ரேட்டை அதிகப்படுத்தி இந்தியா அந்த பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 87 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார்.

பெரிய இலக்கை சேஸ் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெறவைத்தார்.

பல பெரிய பெரிய சேஸ்கள் அரங்கேறிய இந்த ஒருநாள் தொடர் உணர்த்திய சில முக்கியமான விஷயங்களை இங்கே அலசுவோம்.

By admin