• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

வங்காளத்தை கைப்பற்ற 4 முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?

Byadmin

Oct 4, 2026


வங்காளத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற முகலாயப் பேரரசர்கள் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது.

படக்குறிப்பு, வங்காளத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற முகலாயப் பேரரசர்கள் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது.

    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, செய்தியாளர்& ஆராய்ச்சியாளர், லாகூர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

முகலாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு பெரும் படையுடன் வங்காளத்துக்குள் நுழைந்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றிவிடவில்லை.

வரலாற்று ஆய்வாளர் ரிச்சர்ட் ஈட்டன் தனது ‘தி ரைஸ் ஆஃப் இஸ்லாம் அண்ட் தி பெங்கால் ஃப்ரண்டியர் 1204-1760’ என்ற நூலில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிராந்தியத்தின் அப்போதைய தலைநகரான டாண்டாவுக்குள் 1574-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பேரரசின் படை நுழைந்தது முக்கியத் திருப்புமுனையாக அமைந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால், இன்றைய வங்கதேசம் மட்டுமின்றி இந்தியாவின் மேற்கு வங்கம், பிகார், ஒடிசாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தப் பிராந்தியத்தைக் கைப்பற்ற முகலாயர்களுக்கு சுமார் 75 ஆண்டுகள் (1537 முதல் 1612 வரை) ஆனது. இந்தக் காலகட்டத்தில் நான்கு ஆட்சியாளர்களின் ஆட்சி நடைபெற்றது.

இந்தக் காலத்தின் நடுப்பகுதி ‘ஆப்கன் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், வட இந்தியாவில் இருந்து வந்த ஆப்கன் வம்ச ஆட்சியாளர்கள் இப்பகுதியின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

1526-ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஜஹீருத்தீன் முகமது பாபர், இந்தியாவில் ஆட்சி செய்த ஆப்கன் லோடி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரைத் தோற்கடித்து முகலாயப் பேரரசை நிறுவினார். இதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆப்கன்கள் பிகார் மற்றும் வங்காளத்துக்கு வந்து, போர்ப் பிரபுக்களாக அங்கு குடியேறினர்.

‘முகல் ரிலேஷன்ஸ் வித் தி இந்தியன் ரூலிங் எலைட்’ என்ற தனது நூலில் இக்திதார் ஹுசைன் சித்திக்கி குறிப்பிடுவதன்படி, வங்காள சுல்தான் நசிருத்தீன் நஸ்ரத் ஷா (1519–1532), பிகாரில் ஆப்கன்களின் செல்வாக்கை ஊக்குவித்தார். வங்காளத்துக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே அது ஒரு தடுப்பு அரணாக இருக்கும் என்று அவர் நம்பினார்.

By admin