• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் – தூதர அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

Byadmin

Sep 17, 2026


பாகிஸ்தான் கடற்படையை சேர்ந்த கப்பல் இந்திய கடற்படை கப்பலை மோதிய சம்பவத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் 15, அரபிக் கடலின் வடக்கே இந்​தி​ய கடற்​படை​யின் போர்க் கப்​பல் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சா்வதேச நீா்பரப்பில் இந்​தி​ய கடற்​படை​ போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் அதிக வேகத்​தில் மோதி​யது. இதில் பெரிய சேதம் ஏற்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

கண்டனம்

ஆயினும் பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரக பொறுப்பு அதி​காரி சாத் வார்​ரைச்-ஐ, வெளி​யுறவுத்​துறை அமைச்​சகதுக்கு நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் பாகிஸ்​தான் கடற்​படை செய்தது ஏற்​றுக்​கொள்ள முடி​யாத ​ தொழில்​முறையற்ற நடவடிக்கை ஆகும்.

இது, 1991 ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போடப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் மற்​றும் படை நகர்​வு​கள் குறித்த முன்​கூட்​டிய தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளி​யுறவு அமைச்​சகம் அவரிடம் தெரி​வித்​தது.

இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இருநாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்து, உரிய கவனத்​துடன் செயல்பட ​​பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டு பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தியுள்ளது.

By admin