• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்தாலும் பணத்தாள்களின் முக்கியத்துவம் நீடிப்பது ஏன்?

Byadmin

Sep 17, 2026


இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தற்போது 176 பில்லியன் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வைத்துள்ளது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, ரிசர்வ் வங்கி தற்போது 176 பில்லியன் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அதிகமான இந்தியர்கள் தட்டி, ஸ்கேன் செய்து, ஸ்வைப் செய்து பணம் செலுத்துகின்றனர். அதே நேரத்தில், ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் மேலும் அதிகமான காகிதப் பணத்தையும் கையிருப்பில் வைத்துக் கொள்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது 176 பில்லியன் பணத் தாள்களைப் புழக்கத்தில் வைத்துள்ளது. ஆண்டுதோறும் ஆறு பண மதிப்பீடுகளில் 28 முதல் 30 பில்லியன் புதிய நோட்டுகளை அச்சிடுகிறது, சுமார் 21 பில்லியன் பழைய நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுகிறது. இது மிகப்பெரிய நிர்வாக மற்றும் விநியோக நடவடிக்கை.

ஆனால், ஒருங்கிணைந்த செலுத்துதல் இடைமுகம் (United Payments Interface – யுபிஐ) வழியிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் என்ற அளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. அப்படி இருந்தும்கூட, நாட்டின் பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவும் தொடர்ந்து கணிசமான வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

“டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்ததன் காரணமாக தனிப்பட்ட பரிவர்த்தனைகளில் பணத்தின் பங்கு குறைந்து கொண்டிருந்தாலும், புழக்கத்தில் உள்ள நாணயத்தின் அளவு தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரு போக்குகளின் இணைவு, எதிர்காலத் தேவையைக் கணிப்பதைக் கடினமாக்குகிறது. அதனால் உற்பத்தி மற்றும் விநியோகத் திறனைத் திட்டமிடுவது சிக்கலாகிறது,” என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மூ கடந்த மாதம் ஜகார்த்தாவில் நடந்த மத்திய வங்கியாளர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது கூறினார்.

அவர் இதை “பண முரண்பாடு” (Cash Paradox) என்று குறிப்பிட்டார். ஆனால் “புழக்கத்தில் உள்ள நாணயம்” என்றால் என்ன?

By admin