• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

இந்திய பிரதமர் மோதியை நார்வே பத்திரிகை ‘பாம்பாட்டி’ போல் சித்தரித்து என்ன எழுதியுள்ளது?

Byadmin

May 21, 2026


பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Lise Åserud / NTB / AFP via Getty Images) / Norway OUT

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் செய்திகளில் இடம்பிடித்தது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் தொடர்ந்து விவாதப் பொருளாக நீடித்து வருகிறது.

முன்னதாக, உள்ளூர் பத்திரிகையாளர் ஹெலா லாங் மோதியிடம் கேள்வி எழுப்பியது (அதற்கு பிரதமர் நரேந்திர மோதி பதிலளிக்கவில்லை) குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது.

தற்போது நார்வே செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோதி குறித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) பேசுபொருளாக மாறியுள்ளது.

இது விவாதிக்கப்பட்டு வருவதுடன், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

அந்த நார்வே செய்தித்தாள் ‘ஆஃப்டன்போஸ்டன்’ ஆகும். இது நார்வேயின் பிரபல நாளிதழ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

By admin