• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

இந்திய முஸ்லிம்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் அமெரிக்காவில் மோகன் பகவத் கூறியது என்ன?

Byadmin

Aug 31, 2026


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதன் அவசியத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதன் அவசியத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், சனிக்கிழமை நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை “வெளியேற்ற வேண்டும்” என்று நம்பும் ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார்.

மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்த இந்துத்துவக் கருத்தில், இவ்வாறு யாரையும் விலக்கி வைப்பதற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நியூயார்க்கில் அஹெட் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த மதத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய மோகன் பகவத், சமூக மற்றும் மத அமைப்புகள் பொதுக் கொள்கைகளிலும் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றன என்றார். ஆனால், அதற்கான மாற்றத்தை அவர்கள் சமூகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஏனெனில், “அரசியல் தற்போது சுயநலத்துக்கான ஒரு விளையாட்டாக மாறிவிட்டது” என்று அவர் தெரிவித்தார்

மோகன் பகவத்தின் இந்தக் கருத்துக்கு அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். மோகன் பாகவத் கூறியதை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோகன் பகவத்தின் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே சர்ச்சையை எதிர்கொண்டது. நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி, இந்த நிகழ்ச்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் (சிலரை) ஒதுக்கும் தன்மை கொண்டதாகவும், நியூயார்க் நகரின் பன்மைத்துவக் கொள்கைக்கு முரணானதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

By admin