• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைய ரெட் ஸ்டார் கடும் பிரயத்தனம்

Byadmin

Aug 31, 2026


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான சுப்பர் லீக் சம்பியன்ஷிபின் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைய பேருவளை ரெட் ஸ்டார் கழகம்   கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறது.

சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்ல ரெட் ஸ்டார் கழகத்துக்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படும் நிலையில் இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சியை எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை ரெட் ஸ்டார் கழகம் விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 2 தொல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 5ஆம் இடத்தில் இருக்கிறது.

டிபெண்டர்ஸ் எவ்சி தனது 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மாத்திரமே ஈட்டியுள்ளது. ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட டிபெண்டர்ஸ் எவ்சி, மற்றைய 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.

இதன் படி 4 புள்ளிகளுடன் டிபெண்டர்ஸ் எவ்சி 8ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளின் பெறுபேறுகள், அவை போட்டிருக்கும் கோல்கள் ஆகிய ன இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதைக் காட்டுகிறது.

ஆகையால் இந்தப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

By admin