• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

எருமை யாருடையது? உரிமை சர்ச்சைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யும் போலீஸ் – பிகாரில் வினோத சம்பவம்

Byadmin

Aug 31, 2026


எருமை, குற்றம், டிஎன்ஏ பரிசோதனை, பிகார் போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மிர்சா ஏ. பி. பேக்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மனிதர்களின் குடும்ப தொடர்புகள், அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் சில சமயங்களில் குற்ற விசாரணைகளுக்காக டிஎன்ஏ பரிசோதனை செய்வது இயல்பானது. ஆனால், பிகார் மாநிலத்தில் எருமை ஒன்றின் உரிமை தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பதற்காக அந்த எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்றால், பிகாரின் சியோத்ரா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் யாதவும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மாஞ்சியும் ஒரே எருமைக்கு உரிமை கோரி வருகின்றனர்.

இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், பிரச்னைக்கு விரைவில் அறிவியல் ரீதியாகத் தீர்வு காண காவல் துறை ஐ.ஜி. விகாஸ் வைபவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருடப்பட்டதாகக் கூறப்படும் எருமைக்கும், அதன் குட்டி எனக் கூறப்படும் மற்றொரு எருமைக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தி, உரிமை தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

சூரஜ் யாதவ் என்பவர், தனது எருமை சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.

By admin