• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளத்தில் 900 மாணவர்களை கடைசி நிமிடத்தில் தலைமை ஆசிரியர் காப்பாற்றியது எப்படி?

Byadmin

Aug 30, 2026


ராஜேந்திர தாவாடி
படக்குறிப்பு, ராஜேந்திர தாவாடி

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேற்ற தலைமை ஆசிரியர் எடுத்த விரைவான முடிவு 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியது.

வெள்ளநீர் வரவிருப்பதாக எச்சரிக்கை கிடைத்த சில நிமிடங்களுக்குள், மாணவர்களை உயரமான பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவாடி பிபிசியிடம் தெரிவித்தார்.

தானும் தனது நண்பர்களும் “வெறும் 10 விநாடிகள் வித்தியாசத்தில்” உயிர் தப்பியதாக ஒரு மாணவி கூறுகிறார். தங்களுக்கு அருகில் இருந்த சந்தைப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அவர் நேரில் பார்த்துள்ளார்.

புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவில் நேபாளத்தில் குறைந்தது 794 பேர் உயிரிழந்துள்ளனர்; 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினர் இன்னும் காணவில்லை என சீன அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். காணாமல் போன வெளிநாட்டினரில் 49 இந்தியர்கள் உள்ளனர்.

By admin