• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்ப் உரைகள் மூலம் பணம் சம்பாதித்த வெள்ளை மாளிகை முன்னாள் ஊழியருக்கு ரூ1.64 கோடி அபராதம்

Byadmin

Aug 30, 2026


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகளில் அவர் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான உள்தகவலை பயன்படுத்தி பந்தயம் கட்டியதாகக் கண்டறியப்பட்ட  வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிப்ராம்ப்டர் இயக்குநருக்கு 1.72 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Sara D. Davis/Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகளில் அவர் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான உள்தகவலை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிப்ராம்ப்டர் இயக்குநர், 1.72 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (ரூ1.64 கோடி) அதிகமான தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கேப்ரியல் பெரெஸ் என்ற அந்த நபர், 2025 டிசம்பர் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலத்தில் அதிபர் டிரம்ப் ஆற்றிய உரைகளில் அவர் என்ன கூறுவார் என்பது தொடர்பாக ‘கால்ஷி’ என்ற கணிப்பு சந்தை தளத்தில் வர்த்தகங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டார்.

உண்மை உலக நிகழ்வுகளின் முடிவுகளை முன்னறிவித்து பணம் வைத்து ஊகம்/கணிப்பு வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கும் இந்த தளத்தில் பெரெஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்த கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் (சிஎஃப்டிசி), அவர் ஈட்டிய 107,539.02 அமெரிக்க டாலர் லாபத்தை ஒப்படைக்கவும், மேலும் 65,000 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஜூலை மாதத்தில் அப்போதைய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், பெரெஸ் ஊதியமில்லா விடுப்பில் இருப்பதாகவும், அவர் மீண்டும் பணிக்கு திரும்பமாட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமரச அறிவிப்பில், டிரம்பின் உரைகள் குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவலை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டதன் மூலம் பெரெஸ், தமக்கிருந்த நம்பிக்கை மற்றும் ரகசியக் கடமையை மீறியதாக சிஎஃப்டிசி தெரிவித்தது.

By admin