இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில், கட்டுக்கடங்காத பெருவெள்ளத்தில் இருந்து தனது இரண்டு குழந்தைகளை ஒரு தாய் நூலிழையில் காப்பாற்றும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பேரழிவை ஏற்படுத்தும் நேபாள வெள்ளம்
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பயங்கரமான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கார்கள், பேருந்துகள், ராட்சத மரங்கள், பாலங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் எனத் தன் பாதையில் உள்ள அனைத்தையும் இந்த வெள்ளம் சுருட்டி இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
மரண ஓட்டம்: நூலிழையில் தப்பிய உயிர்
தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறு குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு தாய் சாலையில் ஓடுகிறார்.
அவர்களுக்குப் பின்னால் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வரும் வெள்ள நீர், நொடிப் பொழுதில் அவர்கள் நின்ற சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.
அவர்கள் சாலையைக் கடந்து மேடான பகுதியை நோக்கி ஓடிய அடுத்த சில வினாடிகளில், அங்குள்ள மின் கம்பங்கள் வெடித்துச் சிதறி வெள்ளத்தில் மூழ்குகின்றன.
கண்சிமிட்டும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்தத் தாய் ஓடியதால் மட்டுமே, மூவரின் உயிரும் இன்று நூலிழையில் தப்பியுள்ளது.
Hey Bhagwan I’m speechless.
I can’t imagine the pain of watching your entire world being swept away like this. Praying for everyone affected. May everyone stay safe and find strength through this tragedy. #Nepal #Flood #PrayForNepal #StaySafe pic.twitter.com/DiIMGVAKQr— R (@Bamdevrijal) August 29, 2026
உலகளவில் குவியும் பாராட்டுகள்
மரண பயம் காட்டிய அந்தச் சூழலிலும், பதற்றமடையாமல் தனது இரண்டு குழந்தைகளையும் அவ்வளவு வேகமாக ஓட வைத்து, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்தத் தாயின் துணிச்சலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
“உயிர் பிழைப்பதே கடினமான ஒரு பேரழிவுச் சூழலில், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் இரண்டு குழந்தைகளையும் மீட்டெடுத்த இந்தத் தாயின் செயல் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்று” எனப் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து இக்காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.