• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பின்றி ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: தூதர் பிலிப் கிரீன்

Byadmin

May 3, 2026


இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

வேளாண்மை துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அதை செய்ய முடியும்.

சரக்கு, சேவை என இரு பக்கங்களிலும் நாம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலாம். ஒருவர் மற்றவரின் தகுதிகளை அங்கீகரித்து முன்னேறிச் செல்லலாம். அதன்மூலம் மக்கள் இரு நாடுகளிலும் பணியாற்றலாம்.

ஆஸ்திரேலிய விசா முறை, இனபாகுபாடு பார்ப்பது இல்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் வெளிநாட்டினரில் பெரும்பகுதியினர் இந்திய மாணவர்கள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin