• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

இந்திய அரச குடும்ப வசமிருந்த 17ஆம் நூற்றாண்டு ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ – என்னவெல்லாம் செய்யும்?

Byadmin

May 3, 2026


17-ஆம் நூற்றாண்டு, லாகூர், ஆஸ்ட்ரோலேபுகள், அகா அஃப்சல், வானியல் கருவி,  ஏலம், ஏல விற்பனை

பட மூலாதாரம், Courtesy Sotheby’s

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த அஸ்ட்ரோலேப் வானியல் கணினி, லண்டனில் உள்ள சோத்பீஸில் ஏலம் விடப்படவுள்ளது

ஒரு காலத்தில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் அரச சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கண்கவர் பித்தளை வானியல் கருவி – அல்லது கையடக்க வானியல் கணினி – லண்டனில் நடந்த ஏல விற்பனையில் 2.75 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக ஏலம் போயுள்ளது.

இஸ்லாமிய உலகைச் சேர்ந்த ஒரு வானியல் கருவி மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை என்று ஏலத்தை நடத்திய சோத்பீஸ் (Sotheby’s) நிறுவனத்தின் பிரதிநிதி பிபிசியிடம் தெரிவித்தார். இந்தத் தனித்துவமான கருவி இந்த வாரம் லண்டனில் உள்ள சோத்பிஸ் கலைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

“இது தற்போது புழக்கத்தில் இருக்கும் அஸ்ட்ரோலேப்களிலேயே மிகப் பெரிதாக இருக்கலாம். இதற்கு முன்பு இது பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டதே இல்லை” என்று சோத்பிஸ் நிறுவனத்தின் இஸ்லாமிய மற்றும் இந்திய கலைப் பிரிவின் தலைவர் பெனடிக்ட் கார்ட்டர் பிபிசியிடம் கூறினார்.

இந்தக் கருவி ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் சவாய் மான் சிங்கின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு, அக்காலத்தின் மிகவும் புகழ்பெற்ற அழகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட அவரது மனைவி மகாராணி காயத்ரி தேவியிடம் இது ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஒரு கட்டத்தில் இது ஒரு தனியார் சேகரிப்பாளரின் கைக்கு மாறியது.

‘ஆஸ்ட்ரோலேப்கள்’ என்பவை, பல அடுக்குகளைக் கொண்ட, ஒன்றோடு ஒன்று பிணைந்த பாகங்களைக் கொண்ட உலோகத் தட்டுகளாகும்; இவை நேரத்தைக் கணிக்கவும், விண்மீன்களைப் பட்டியலிடவும், மெக்காவின் திசையைக் கண்டறியவும், வானியல் இயக்கங்களை அறியவும் பயன்படுத்தப்பட்டன.

By admin