• Tue. Nov 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்திரா காந்தியைக் கண்டு ஏன் பயந்தேன்? காரணத்தை விளக்கிய சோனியா காந்தி

Byadmin

Nov 17, 2026


ஆரம்பத்தில் இந்திரா காந்தியை 'அம்மா' என்று அழைக்கத் தயங்கியதாகக் கூறினார் சோனியா காந்தி.

படக்குறிப்பு, ஆரம்பத்தில் இந்திரா காந்தியை ‘அம்மா’ என்று அழைக்கத் தயங்கியதாகக் கூறினார் சோனியா காந்தி.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நவம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், அவரும் அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் காந்தி குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டிம்பிள் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, பாஜக தலைவரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சருமான கேப்டன் அமரீந்தர் சிங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்தது.

திருமணத்துக்குப் பிறகு தனது மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடனான ஆரம்பகால உறவு எப்படி இருந்தது என்பதை சோனியா காந்தி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

இந்திரா காந்தியை ‘அம்மா’ அல்லது ‘மம்மி’ என்று அழைப்பதற்கு ஏன் தயங்கினார் என்பதையும் அவர் விளக்கினார்.

By admin