• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை | கின்னஸ் அங்கீகாரம் பெற்ற கலைப்படைப்பு

Byadmin

Nov 22, 2026


இந்தோனேசியாவின் பாலி தீவில் பிரம்மாண்டமான செயற்கைப் பிரம்பால் விநாயகர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது தனது ஆன்மீக முக்கியத்துவத்தையும் தாண்டி, தனித்துவமான கைவினைத்திறனுக்காகக் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கலைப்படைப்பு  சுமார் 15.315 மீற்றர் (50 அடி 2 அங்குலம்) அடி உயரம் கொண்டதாகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தும் வருகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசிய நாட்டில், வளமான இந்து பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற பாலி மாகாணத்தில், செயற்கைப் பிரம்பினால் (Synthetic rattan) பின்னப்பட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியப் பின்னல் கலை நுட்பத்தையும் நவீனப் பொருட்களையும் இணைத்து, 126 உள்ளூர் பாலினியக் கைவினைக் கலைஞர்கள் இணைந்து இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

இந்தச் சிலை, உலகின் மிக உயரமான தாங்கிப் பிடிக்கப்பட்ட செயற்கைப் பிரம்புச் சிலையாக (Tallest supported synthetic rattan sculpture) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ‘அலாஸ் ஹரம் பாலி’ (Alas Harum Bali) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை, ஞானம், வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளான விநாயகரைச் சித்தரிக்கிறது.

இது புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான பாலியின் புதிய அடையாளமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

By admin