• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்.. ஒடிசாவில் 1 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் – 60 ரெயில்கள் ரத்து

Byadmin

Nov 20, 2026


வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஒடிசா அருகே கரையை இன்று நண்பகல் கரையை கடக்க உள்ளது.

மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த அக்வான் புயல் தெற்கு ஒடிசா கடற்கரையை இன்று (20ந்தேதி) நண்பகல் கடக்க உள்ளது.

அப்போது காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. ஆகவும் சில நேரங்களில் 110 கி.மீ. வரையும் இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா

ஒடிசாவில் இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில், கரையோர பகுதிகளில் வசிக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 1224 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்குப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.

மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக 941 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒடிசா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மொத்தம் 9299 தங்குமிடங்கள் செயல்பட்டு வருகின்றது.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

தாக்கம்

அக்வான் புயல் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்வான் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடாவை சேர்ந்த சுமார் 80 மீனவர்கள் 10 இயந்திரப்படகுகளுடன் ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தமிழகம்

அக்வான் புயல் ஒடிசா நோக்கி சென்றதால் தமிழகத்தில் 22ந் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும்.

அதன் பின்னர் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு மீண்டும் தொடங்குகிறது.

By admin