• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

விவேக்கிற்கு ‘சின்னக் கலைவாணர்’ பட்டம் கிடைத்தது எப்படி? திரையுலகினர் பகிரும் நினைவுகள்

Byadmin

Nov 20, 2026


நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று

படக்குறிப்பு, நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று

நகைச்சுவை மூலம் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 19).

‘சின்னக் கலைவாணர்’ என்று அழைக்கப்பட்ட விவேக், திரைப்படங்களில் நகைச்சுவையுடன் மூடநம்பிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளையும் பேசினார்.

திரையுலகில் அவருடன் பணியாற்றியவர்கள் விவேக் குறித்த தங்கள் நினைவுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

விவேக்கிற்கு ‘சின்னக் கலைவாணர்’ பட்டம் கிடைத்தது எப்படி? நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கும்போது அவர் எவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார்?

கே.பாலசந்தர் விவேக்கை அறிமுகப்படுத்தியது எப்படி?

கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி

படக்குறிப்பு, கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி

1961-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் விவேக் பிறந்தார். அவரது இயற்பெயர் விவேகானந்தன்.

By admin