• Fri. Jul 3rd, 2026

24×7 Live News

Apdin News

இன்ஸ்டாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் குறித்த விளம்பரங்கள் விவகாரம்: மெட்டாவுக்கு மத்திய அமைச்சர் சம்மன்

Byadmin

Jul 3, 2026


இன்ஸ்டாகிராம் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பி வருவதாக பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இன்ஸ்டாகிராம் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பி வருவதாக பிபிசி ஐ புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சங்கடம் தரலாம்.

இந்தியாவில் பணம் பெற்றுக்கொண்டு, குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களைப் பரப்பும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் இயக்கி வருவதாக பிபிசி-ஐ புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

இது வெளியானதைத் தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு அவர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோர உள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையும் தெரிவித்துள்ளது.

பிபிசி நடத்திய அந்தப் புலனாய்வில், இந்த விளம்பரங்களில் ‘பாலியல் வல்லுறவு வீடியோ’, ‘சைல்ட் வீடியோ’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு டெலிகிராம் செயலியின் சேனல் லிங்க் வழங்கப்படுகிறது. அங்கு பயனர்கள் இத்தகைய உள்ளடக்கங்களை வெறும் 99 ரூபாய்க்கு வாங்க முடியும்.

By admin