சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 மாநகராட்சி மற்றும் ஊராட்சி மண்டல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் உட்பட பல மண்டல அலுவலகங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.
நெல்லை, திருவண்ணாமலை, ஈரோடு மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். திருமங்கலம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரினை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.