• Fri. Jul 3rd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா, பாகிஸ்தான் இடையே கொழும்பில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததா? முழு பின்னணி

Byadmin

Jul 3, 2026


ராம் மாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராம் மாதவ் 2014 முதல் 2020 வரை பாஜக-வின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

என்ன நடக்கிறது என்பது வெளியில் தெரிவதில்லை, வெளியில் தெரிவது நடப்பதில்லை என்று ராஜ்ஜீய பேச்சுவார்த்தைகள் குறித்துப் பல நேரங்களில் சொல்லப்படுவது உண்டு.

அரசியல் அறிக்கைகளின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா இடையிலான உறவுகளை உற்று நோக்கினால், இரு நாடுகள் இடையே மூச்சுவிடக்கூட இடமில்லாத அளவுக்குப் பதற்றம் மிக அதிகமாக இருப்பது போலத் தோன்றும்.

ஜூன் 27 அன்று, லண்டனை சேர்ந்த ஒரு சிந்தனைக் குழு கொழும்பில் பிராந்திய பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து இருந்ததாகவும், அதில் இந்திய, பாகிஸ்தானிய தூதுக் குழுக்கள் டிராக் 2 பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாகவும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராட்டஜிக் ஸ்டடீஸ் அமைப்பின் இந்தப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், பிரிட்டன் உள்படப் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்திய, பாகிஸ்தானிய பிரதிநிதிகள் இடையே ஒன்றரை நாட்களாகப் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வட்டாரங்களை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.

By admin