• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

‘இமயமலையிலும் அதே கல்’: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்துக்கு விமர்சனங்கள் எழுவது ஏன்?

Byadmin

Nov 19, 2026


திருப்பரங்குன்றம், தமிழ்நாடு அரசு, இந்து அமைப்புகள், உச்ச நீதிமன்றம், திருப்பரங்குன்றம் தர்கா, கல் தூண், கார்த்திகை தீபம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

‘உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த அனுமதித்தால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நில அளவைத் தூண்கள் மதத் தன்மை கொண்டவையாக மாற வழிவகுக்கக்கூடும்’ என, புதன்கிழமையன்று (நவம்பர் 18) உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு தி.மு.க அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த வாதத்துக்கு முரணாக த.வெ.க அரசின் வாதம் உள்ளதாக, இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.

ஆனால், ‘காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையே தொடர வேண்டும்’ என, தர்கா நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறத்தில் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

By admin