• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது என்ன?

Byadmin

Nov 18, 2026


அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,  ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்தனர்.

படக்குறிப்பு, அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்தனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்து இதுதொடர்பாக கடிதம் அளித்துள்ளனர்.

கடந்த வாரம், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

நவம்பர் 13-ஆம் தேதி  மைசூருவில் பிரதமர் முன்னிலையில் மேகேதாட்டு திட்டம் குறித்து டி.கே.சிவக்குமார் பேசினார்

படக்குறிப்பு, நவம்பர் 13-ஆம் தேதி மைசூருவில் பிரதமர் முன்னிலையில் மேகேதாட்டு திட்டம் குறித்து டி.கே.சிவக்குமார் பேசினார்

நவம்பர் 13-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரதமர் மோதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு அணைத் திட்டத்துக்குத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

மேகேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய டி.கே.சிவக்குமார், இந்த அணை பெங்களூருவின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் தமிழ்நாட்டுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

By admin