• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

நாளை வெளியாகும் தகப்பன் படத்தின் இரண்டாவது பாடல்

Byadmin

Nov 18, 2026


நடிகர் ஜீவா நடிக்கும் தகப்பன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் இரண்டாவது பாடல்

நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாலே’ நாளை மாலை வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது . இதனை நடிகர் ஜீவா தனது சமூகவலை பதிவில் பகிர்ந்துள்ளார்.

கிடா படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.கருடன், மாமன் போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படம் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜீவா மற்றும் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.

வரவேற்ப்பை பெற்ற முதல் பாடல்

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான சொக்க வச்சாலே பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin